படித்ததில் பிடித்தது: பச்சோந்தி –ஆண்டன் செகாவ்

அன்றும் சரி இன்றும் சரி அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கே அனைவரும் பணிந்து போகிறார்கள். அதுவும் குறிப்பாக அரசாங்க அதிகாரிகள். மிகக் குறிப்பாக போலீஸ்காரர்கள். பொது மக்களின் ஊழியர்களாகச் செயல்படவேண்டியவர்கள் அரசாங்கத்தின் கைப்பாவையாகப் பணியாற்றுவது ஜனாநாயக நாட்டில் மட்டுமல்ல, முதலாளித்துவ, கம்யூனிச நாடுகளிலும் இருப்பது கண்கூடு. தம் வாழ்க்கையின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகவே சராசரி ஜனங்கள் இதை எதிர்கொண்டு வாழ்கிறார்கள்.

இந்தச் சிக்கலை, கருத்தை வலியுறுத்துவதாக அமைந்த கதைதான் செகாவின் பச்சோந்தி. இந்த ஆழமான கருத்தை, சிக்கலான கருத்தை, போகிற போக்கில் அற்புதமாகச் சொல்லிச் செல்கிறார் செகாவ். மிக எளிமையான கதை. ஆனால் அது நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. ஒரு சிறு சம்பவத்தை வைத்து தான் சொல்லவந்த கருத்தை இலாவகமாக, அதே சமயம் அழுத்தமாக இந்தக் கதையில் சித்தரிக்கிறார் செகாவ் என்ற படைப்பாளி. Read more of this post

படித்ததில் பிடித்தது: குதிரை –சுஜாதா

நம் அனுபவத்தில் இதுவரை நிகழாத ஒன்று நிகழும்போது ஏற்படும் சிக்கல்களை தனக்கேயான நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் சுஜாதாவின் குதிரை என்ற கதை. மனிதர்களை நாய் கடிப்பதும் அதற்கு வைத்தியம் பார்ப்பதும் நம் வாழ்வில் நாம் சாதாரணமாக பார்த்தும் பழகியதுமான ஒரு நிகழ்வு. ஆனால் அதுவே ஒரு குதிரை கடித்தால்?

கிச்சாமி என்னும் கிருஷ்ணசாமியை ஒரு நாள் குதிரை ஒன்று கடித்துவிடுகிறது. அவன் மனைவி முதல் டாக்டர் வரை அதை விநோதமாகப் பார்க்கிறார்கள். டாக்டருக்கு நாய்க்கடிக்கு வைத்தியம் செய்வது தெரியும். குதிரைக் கடிக்கு என்ன செய்வது? எந்த மெடிகல் டிக்ஸனரியிலும் அதற்கு விளக்கம் இல்லை. அதற்காக வைத்தியம் செய்யாமல் விடமுடியமா? டாக்டரும் தனக்குத் தெரிந்த வைத்தியத்தைச் செய்கிறார். Read more of this post

படித்ததில் பிடித்தது: நாயுடன் வந்த பெண் -செகாவ்

செகாவின் மற்றொரு புகழ்பெற்ற கதை இது. வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணையும் இருவரிடையே ஏற்படும் மன வேற்றுமைகள் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறது என்பதைச் செகாவ் இக்கதையில் படம் பிடித்துக்காட்டுகிறார்.

யால்ட்டா நகரில் சந்திக்கும் குரோவ் மற்றும் அன்னா இருவருக்குமிடையே நட்பு ஏற்படுகிறது. இருவருமே தத்தம் குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி அடைந்தவர்கள். குரோவிற்கு தன் மனைவி மீதும், அன்னாவிற்கு தன் கணவன் மீதும் ஏற்படும் அதிருப்தி இருவரையும் இணைக்கிறது. இருவரும் வெவ்வேறு நகரத்தில் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து வருவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சலித்துவிடுகிறது. எனவே ஏதாவது செய்யவேண்டும் என்று யோசிக்கிறார்கள். Read more of this post

படித்ததில் பிடித்தது: சொல்லின் செல்வன் –செகாவ்

செகாவின் இக்கதை இறந்துவிட்ட பேராசிரியர் ஒருவரின் இறுதிச்சடங்கின் போது நடக்கும் நிகழ்ச்சியை நகைச்சுவையாகச் சொல்கிறது. இறந்து போனவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் மாரியாதை கருதி அவர் இப்படி அப்படி என்று புகழ்ந்து பேசுவது சமூகத்தில் ஒரு மரபாகிப் போன விசயம். அதை அடிப்படையாக வைத்து, அதனூடே நகைச்சுவை மூலாம் பூசி இக்கதையைப் படைத்துள்ளார். படியுங்கள் கட்டாயம் சிரிப்பீர்கள்.

ஆனால் வெறும் நகைச்சுவைக்காக மட்டும் செகாவ் இக்கதையைச் சொல்லவில்லை. அந்த நகைச்சுவைக்குப் பின்னே இருக்கும் சமூகத்தின் மாற்று முகத்தைக் காட்டுவதே அவரது நோக்கம். இறந்து போனவனின் மாற்று முகத்தை அல்ல என்பது நாம் நுட்பமாகக் கவனிக்க வேண்டிய விசயம். மேலும் சமூகத்திற்கு தனி ஒரு மனிதனின் இழப்பு என்பது பொருட்படுத்த தக்கதல்ல என்பதையும் நமக்கு அறிவுறுத்துகிறார். Read more of this post

படித்ததில் பிடித்தது: பந்தயம் –ஆண்டன் செகாவ்

வாழ்க்கையில் பல்வேறு சந்தர்பங்களில் பல்வேறு முடிவுகளை நாம் எடுக்கிறோம். ஆனால் அதை நிறைவேற்றும் தருணத்தில், ஆதாயம் கருதியோ இல்லை அந்த ஆதாயத்தை மறுதலித்தோ நாம் எடுத்த முடிவை மாற்றிக்கொள்கிறோம். இதற்குக் காரணம் என்ன? நாம் முடிவு எடுத்ததற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இடையேயான கால இடைவெளி நம்மை மாற்றிவிடுகிறது. எனவே நாம் முன்னரே எடுத்திருந்த முடிவை செயல்படுத்தாமல் விடுகிறோம். எனவே எண்ணத்துக்கும் அதை செயல்படுத்துவதற்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி சதா இருந்துகொண்டே இருக்கிறது. அது காலத்தின் இடைவெளியாயும் இருக்கலாம் அன்றி எண்ணத்தின் இடைவெளியாகவும் இருக்கலாம்.

செகாவின் பந்தயம் சிறுகதையில் வங்கி அதிபருக்கும் வக்கீலுக்கும் இடையே நடக்கும் பந்தயத்தில் இருவருக்கும் இதுவே நேர்கிறது. மரண தண்டனை கொடியதா இல்லை ஆயுள் தண்டனை கொடியதா என்ற விவாதம் இருவருக்குமிடையே வருகிறது. அப்போது வங்கி அதிபர் ஆயுள் தண்டனையே கொடியது என்கிறார். வக்கீலோ சாவதைவிட எப்படியும் உயிரோடிருக்கம் ஆயுள் தண்டனை மேலானது என்கிறார். விவாதம் பந்தயமாகிறது. வங்கி அதிபர் 2 மில்லியன் ரூபிள் பந்தயம் வைக்கிறார். வக்கீல் அதற்காக 15 வருடம் தனிமைச் சிறையில் கழிக்க வேண்டும் என்கிறார். Read more of this post

படித்ததில் பிடித்தது: வான்கா –ஆண்டன் செகாவ்

செகாவின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்று வான்கா. ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவனின் துயரத்தையும் ஏக்கத்தையும் நம் மனம் உருகுமாறு அற்புதமாக புனையப்பட்ட கதை இது. இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அசாதாரணமானது. கதையை வாசித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும் துயரம், அந்த சிறுவன் மீது நாம் கொள்ளும் பரிவு, வார்த்தைகளில் சொல்லமுடியாதது.

புதைமிதி தாயாரிக்கும் அல்யாஹினிடம் வேலை பழகுவதற்காக விடப்படுகிறான் வான்கா. அங்கே அவன் முதலாளியாலும் சக தொழிலாளர்களாலும் கொடுமைப் படுத்தப்படுகிறான். அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருக்கிறது அவனுக்கு. எனவே தன்னை அங்கிருந்து கூட்டிச் செல்லுமாறு தன் தாத்தாவுக்குக் கடிதம் எழுதுகிறான். Read more of this post

படித்ததில் பிடித்தது: பரிசுச்சீட்டு –ஆண்டன் செகாவ்

ருஷ்யச் சிறுகதை இலக்கியத்தின் மேதை என்று போற்றப்படுபவர் ஆண்டன் பாவ்லொவிச் செகாவ். அவர் எழுதிய பரிசுச்சீட்டு என்ற கதை மனித மனத்தின் ஊசலாட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துவதாக உள்ளது. அது நடைமுறை வாழ்க்கை என்றாலும் சரி வெறும் கற்பனை என்றாலும் சரி. இரண்டிலுமே மனிதர்கள் ஒன்று போலத்தான் சிந்திக்கிறார்கள் என்பதை சுவையாக சித்தரிக்கிறார் அவர்.

மனித வாழ்க்கையில் எதார்த்தத்தைவிட கற்பனை அழகாகவும், விருமபத்தக்கதாகவும், கொண்டாடத்தக்கதாயும் இருக்கிறது. கையில் கிடைக்கும் சிறு துருப்புச் சீட்டும் நம் கற்பனையை சிறகடித்துப் பறக்க வைக்கிறது. இருப்பின் பாரம் இக் கற்பனைகளின் மூலமே லகுவாகிறது. வாழ்க்கைப் பாதையில் நம்மைச் சற்றே ஆசுவாசப்படுத்துவன இத்தகைய கற்பனைகளே. Read more of this post

படித்ததில் பிடித்தது: நடனத்துக்குப் பின் –டால்ஸ்டாய்

மனித வாழ்வை நடத்துவன சூழ்நிலைகளா இல்லை தற்செயலாய் நிகழும் சம்பவங்களா எனும் கேள்வியை முன்னிருத்தி நடனத்துக்குப் பின் என்ற கதையைப் படைத்துள்ளார் லியோ டால்ஸ்டாய். இந்தக் கருத்தே நமக்கு முரண்பாடாகத் தெரிகிறது. சூழ்நிலைகள் வேறு தற்செயலாய் நிகழும் நிகழ்வுகள் வேறா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. நாம் சிந்தித்துப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. அப்படியாயின் டால்ஸ்டாய் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதியிருக்கிறார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியுமா? அப்படி இல்லை. இதில் நுட்பமான ஒரு கருத்து சூட்சுமமாக ஒளிந்திருக்கிறது.

சூழ்நிலை என்பது இந்த உலகம் முழுதும் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. சதா நம்மைச் சுற்றி இந்த நிகழ்வு நடந்தபடியிருக்கிறது. அதில் நாம் பங்கெடுக்காத வரை அவைகள் நம்மை பாதிப்பதில்லை. அதில் நாம் பங்கெடுத்துவிட்டாலோ, அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை நாம் தீர்மானிக்கமுடியாது. எனவே நம்மைச் சுற்றி நிகழும் சூழ்நிலையில் நாம் நுழையும்போதுதான் அதன் விளைவுகள் நம்மை பாதிக்கின்றன. அந்தச் சூழ்நிலைகளில் நாம் விழுவது தற்செயலாகத்தான் நிகழ முடியும். திட்டமிட்டோ அல்லது வேறு சாத்தியங்களாலோ அதில் நாம் பங்கெடுக்க முடியாது.  Read more of this post

ஜி. நாகராஜனின் கடைசி தினம் -சி.மோகன்

ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம்.

என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.

எஸ்.சம்பத்தின் ‘இடைவெளி’, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.

nalai-matrumoru-naale இன்று ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து இம்மொழிபெயர்ப்பை ‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

க்ரியா ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும் என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். Read more of this post

Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: